உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகிழ் முற்றம் மன்றம் அரசு பள்ளியில் துவக்கம்

மகிழ் முற்றம் மன்றம் அரசு பள்ளியில் துவக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் மன்றம் தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் உம்மேகா பேகம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரகு வரவேற்றார். மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, ஐந்து குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டனர். பின், ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வழிகாட்டி ஆசிரியர்களாக பெரியண்ணன், மாதேஸ்வரி, தீபா ராஜேஷ், மகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாணவர்களின் கற்றல் திறனை மேம்பாடு அடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இந்த குழுக்கள் செயல்பட உள்ளது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பார்த்திபன், ராஜாமணி ஜெகஜீவன் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி