உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருவலுார் மாரியம்மன் கோவில் மஹா சண்டி யாக பெருவிழா

கருவலுார் மாரியம்மன் கோவில் மஹா சண்டி யாக பெருவிழா

அவிநாசி; கருவலுாரில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் மஹாசண்டி யாக பெருவிழா, 13ம் தேதி கணபதி ஹோமம், அனுக்ஞை ஆகியவற்றுடன் துவங்கியது. மூலமந்திர ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமங்கள் நடைபெற்றது. நேற்று மூலமந்திர ஹோமம், 108 திரவியாகுதி, பூர்ணாகுதி, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மஹாசண்டி யாக பெருவிழா நடைபெற்றது. இதில், கோவில் செயல் அலுவலர் செந்தில், அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர்கள் அர்ச்சுனன், தமிழ்ச்செல்வன், உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சண்டியாக பெருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை