திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் ஜூலை 2ல் மஹா கும்பாபிேஷகம்
திருப்பூர்; திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஅய்யப்பன் கோவில் கும்பாபிேஷகம், ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது. நாளை, பூர்வாங்க பூஜைகள்துவங்குகின்றன.திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவில், தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில் நிர்வகிக்கப்படுகிறது.கடந்த, 1960ம் ஆண்டில், வாலிபாளையத்தில் அய்யப்ப பஜனை மடம் இயங்கி வந்தது. தொடர்ந்து, திருப்பூர் காலேஜ் ரோட்டில் இடம்வாங்கி, 1966ல் கோவில் கட்டப்பட்டது.முதல் கும்பாபிேஷகம், 1977ம் ஆண்டிலும், தொடர்ந்து 1990, 1998, 2013ம் ஆண்டுகளில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்படி, 5வது கும்பாபிேஷகம், வரும் ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது.கோவில் தலைவர் நாச்சிமுத்து, பொதுச்செயலாளர் மணி, பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் மோகன்ராஜ், இணைச்செயலாளர்கள் சிவக்குமார், பொன்னுதுரை, சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது:சபரிமலையில் உள்ளது போல், திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், தாந்த்ரீக முறைப்படி, நித்ய பூஜைகள் நடந்து வருகிறது. விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர், கிருஷ்ணர், பத்ரகாளியம்மன், மஞ்சமாதா, நவகிரஹ சன்னதியும், அய்யப்பன் கோவிலும் புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடக்கிறது. நாளை (27ம் தேதி) கும்பாபிேஷக விழா பூஜைகள் துவங்குகின்றன.தினமும், மகா கணபதி ேஹாமத்துடன், காலை மற்றும் மாலை வேளையில், கும்பாபிேஷக விழா பூஜைகள் நடைபெறும். வரும், ஜூலை 2ம் தேதி காலை, 5:00 மணிக்கு பூஜைகள் துவங்கும். காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை, சபரிமலை தந்திரி கண்டரு மோகனரு, கண்டரு மகேஷ் மோகனரு தந்திரிகள் முன்னிலையில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது; 28 ம் தேதி முதல் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.அய்யப்பன் சன்னதி முன், துவாரபாலகர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தேக்கில் கொடிமரம் அமைத்து தங்கதகடு பதிக்கும் பணி, ஆறு மாதங்களுக்கு பின் நடக்கும். கோவில் அருகிலுள்ள சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.