இணைப்பு ரோடுகளில் பராமரிப்பு பருவ மழைக்கு பிறகு தீவிரம்
உடுமலை: பருவமழைக்கு பிறகு சேதமடைந்த ரோடுகளில் மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினரால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் மற்றும் கிராம இணைப்பு ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில், பல கிராம இணைப்பு ரோடுகளில், மழை நீர் தேங்கி ரோடு சேதமடைந்தது. இந்த ரோடுகளில் தற்போது பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, அதிக சேதமடைந்த துங்காவி - கோட்டமங்கலம் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பராமரிப்பு பணிகள் நடக்கிறது.