உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பெண்ணிடம் மோசடி: ஆசாமி கைது

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பெண்ணிடம் மோசடி: ஆசாமி கைது

பல்லடம்; சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் இளங்கோவன், 40. பல்லடம் அடுத்த, மலையம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம், மதுரையில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி, 17 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 2019 முதல் ஆசிரியர் பணியும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல், மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறி, பல்லடம் போலீசாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரித்து, இளங்கோவனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை