மேலும் செய்திகள்
இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
07-Jun-2025
அனுப்பர்பாளையம்: அங்கேரிபாளையம் பகுதியில் நேற்று காலை இளம்பெண் குளித்து கொண்டிருந்தார். வாலிபர் ஒருவர் இளம்பெண் குளிப்பதை தனது மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.இதனைப் பார்த்த பெண் சத்தம் போடவே, தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சிவசங்கர் குமார், 25, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
07-Jun-2025