ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
உடுமலை; கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா நடக்கிறது.மடத்துக்குளம், கணியூர் ஜோதிநகரிலுள்ள ஐயப்பன் கோவிலில், 12ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மண்டல பூஜை விழா இன்று துவங்குகிறது. இன்று காலை, 8:00 மணிக்கு, கணபதி ேஹாமம், மாலை 3:30 மணிக்கு, செண்டை மேளத்துடன், குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, அமராவதி ஆற்றுக்கு ஆராட்டு உற்சவத்திற்கு கிளம்புதல், 5:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகமும், தொடர்ந்து ஊர்வலமும் நடக்கிறது.அதன்பின், சபரிமலை செல்ல மாலை அணிந்துள்ள ஐயப்ப சுவாமிகள் பங்கேற்கும் கூட்டு பஜனை கோவிலில் நடக்கிறது. நாளை காலை, 8:30 மணிக்கு, சுவாமிக்கு, 24 வகை மூலிகை, 5 புண்ணிய நதிகளில் எடுத்து வந்த தீர்த்தங்களுடன் சங்காபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள், அன்னதானம் நடக்கிறது.