சேவூர் ஸ்ரீஐயப்பன் கோவில் நாளை மண்டல பூஜை நிறைவு
அவிநாசி; சேவூர் ஊராட்சி, முறியாண்டம்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 20ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக மண்டல பூஜையையொட்டி நாள்தோறும் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்று வந்தது.நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜை நிறைவு நாளான நாளை (14ம் தேதி) காலை 5:00 மணிக்கு மேல் கணபதி ஹோமம், ருத்ர மஹன்யாச ஹோமம், ஸ்ரீ சாஸ்தா ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டலட்சுமி ஹோமம் ஆகியவை நடக்கின்றன; காலை 8:00 மணிக்கு அஷ்டாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.சிறப்பு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து பக்தர்களுக்கு ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.