உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

உடுமலை, : தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதம் தனித்தேர்வர்களுக்கான,தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் மற்றும் பட்டயச்சான்றிதழ் தற்போது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்து, தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் மற்றும் பட்டய சான்றிதழ்கள் அங்கு வழங்கப்படுகிறது. இத்தகவலை, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ