மேலும் செய்திகள்
எங்கே போனார் எங்க எம்.பி.,?
05-Jul-2025
பல்லடம்; பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தன்னாசியப்பன், 52. இவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் காளிவேலம்பட்டியில் உள்ளது.நேற்று காலை, வழக்கம்போல் தொழிலாளர்கள் குடோனில் வேலை பார்த்து வந்தனர். அப்போது, இயந்திரத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், அலறி அடித்து வெளியேறினர். விபத்து குறித்து அறிந்த, பல்லடம் தீயணைப்பு வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு, நூல்கள், கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jul-2025