உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

உடுமலை : உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிகளில், பணி செய்யும் துாய்மைப்பணியாளர்கள் மற்றும் துாய்மைக்காவலர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ முகாம்கள் குறிப்பிட்ட ஊராட்சிகளை ஒன்றிணைத்து அதற்கான ஒரு மையத்தில் நடந்தன.போடிபட்டி, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், ஜல்லிபட்டி ஊராட்சிகளில் பணிசெய்யும் துாய்மை பணியாளர்களுக்கு, ஜல்லிபட்டி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடந்தது.முகாமில் மண்டல துணை பி.டி.ஓ., பரித்ரஹ்மான், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆஜிரா பேகம், ஊராட்சி நிர்வாகத்தினர், பங்கேற்றனர்.துாய்மைக்காவலர்கள் மற்றும் துாய்மைப்பணியாளர்களுக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனை செய்து, அதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி