உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மெத்தபெட்டமைன் விவகாரம்; கேரள வாலிபர் தலைமறைவு

மெத்தபெட்டமைன் விவகாரம்; கேரள வாலிபர் தலைமறைவு

திருப்பூர்; திருப்பூர் - பி.என்., ரோடு, புஷ்பா தியேட்டர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 13ம் தேதி தங்கியிருந்த 6 பேரிடம் இருந்து 40 ஊசிகள் மற்றும் மெத்தபெட்டமைன், 9.5 கிராம் ஆகியவற்றை வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். ஆறு பேரில் ஒருவரான அசோக் என்பவருக்கு, மற்றவர்கள் 'பேஸ்புக்' மூலம் அறிமுகமான நண்பர்கள். பெங்களூரில் இருந்து ஒரு கிராம், 8 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தது தெரிந்தது. ஆறு பேர் கைது செய்யப்பட்டாலும், இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட ஆறு பேரில், அசோக் என்பவர் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்ததாக கூறினார். வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று விசாரித்த போது, கேரள வாலிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. ஆறு பேரும் பிடிபட்டதை தெரிந்து, அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது அவரை தேடி வருகிறோம். அவர் பிடிபடும் பட்சத்தில் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது போன்ற பல விபரம் தெரிய வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !