உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எம்.ஜி.பி., சுப்ரீம் எலக்ட்ரானிக்ஸில் திறன் மதிப்பீடு குறியீடு பயிற்சி

எம்.ஜி.பி., சுப்ரீம் எலக்ட்ரானிக்ஸில் திறன் மதிப்பீடு குறியீடு பயிற்சி

திருப்பூர்;மத்திய திறனுாக்க செயலகம் 'ஸ்டேண்டர்ட்ஸ் மற்றும் லேபிளிங்' திட்டம் மூலம், வீட்டு உபகரணங்களுக்கு திறன் மதிப்பீட்டு குறியீடு வழங்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மின் வாரியத்துடன் இணைந்து, வீட்டு உபரணங்கள் விற்பனையாளர்களுக்கான திறன் மதிப்பீட்டு குறியீடு பயிற்சி, திருப்பூர்எம்.ஜி.பி., சுப்ரீம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக நிறுவனர் எம்.ஜி.பாலன், ஆற்றல் திறன் மற்றும் நிலைப்புத்தன்மை நிபுணர்அழகிய மணவாளன் பங்கேற்றனர். பயிற்சி வழங்கிய நிபுணர் சுந்தரமூர்த்தி கூறுகையில், தமிழகம் முழுவதும் இதுபோன்ற பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ