உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எம்.ஜி.வி., பள்ளி மாணவர்கள் வில் வித்தை போட்டியில் அபாரம்

எம்.ஜி.வி., பள்ளி மாணவர்கள் வில் வித்தை போட்டியில் அபாரம்

திருப்பூர்; திருப்பூர், வெங்கமேட்டில் உள்ள எம்.ஜி.வி., குளோபல் அகாடமி பள்ளியில், சி.ஐ.எஸ்.சி.இ., தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியங்கள் இணைந்து வில்வித்தைப் போட்டியை நடத்தின. பள்ளி நிறுவனர் பாலாஜி வேணுகோபால், தாளாளர் மற்றும் முதல்வர் மஞ்சுளா பாலாஜி, தசரதன் பள்ளி முதல்வர் ஜெயராஜேஸ்வரி, நாச்சியார் பாடசாலை நிறுவனர் சிவசரண்யா, முதல்வர் கைலேஷ்வரி ஆகியோர் இணைந்து போட்டியைத் துவக்கிவைத்தனர். 14, 17, 19 வயது என இண்டியன், காம்பவுண்ட், ரீகர்வ் என மூன்று பிரிவுகளில், ஏ,பி,சி,டி என நான்கு மண்டலங்களில் விளையாடி வெற்றிபெற்ற 104 வில்வித்தை வீரர், வீராங்கனையர் பங்கேற்று தங்கள் திறனை நிரூபித்தனர். வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்கள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. எம்.ஜி.வி., பள்ளி பிளஸ் 1 மாணவி ஸன்மதி19 வயது ரீகர்வ் பிரிவில் முதலிடம்; பத்தாம் வகுப்பு மாணவன் ஹரிஷ் 17 வயது காம்பவுண்ட் பிரிவில் முதலிடம்; எட்டாம் வகுப்பு மாணவர், ஸ்ரீநிஷ் 14 வயது காம்பவுண்ட் பிரிவில் முதலிடம் பெற்றனர். மூவரும் தேசிய வில்வித்தைப் போட்டிக்கு தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ