குறு மைய விளையாட்டு
திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை மற்றும் போட்டி அட்டவணை தயாரிக்கும் கூட்டம், வாவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.குறு மைய இணை செயலர் உடற்கல்வி ஆசிரியர் இளங்கோவன், வரவேற்றார். குறுவட்ட செயலாளராக செயல்படும் பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி, தலைமை வகித்தார். குறுவட்ட கண்காணிப்பாளர்கள் ஜெரால்ட், பாலகிருஷ்ணன் மற்றும் இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது. போட்டிகளை நடத்தும் மற்றும் நடுவர் பணியாற்றும் உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் பிரின்ஸ், நன்றி கூறினார்.