உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளம் சமுதாயம் சிறக்க ராணுவக்கல்வி அவசியம்

இளம் சமுதாயம் சிறக்க ராணுவக்கல்வி அவசியம்

பழனிசாமி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்:எல்லையில் தங்கள் பந்தம், பாசம், குடும்பங்களை எல்லாம் மறந்து நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் தான், நாம் நிம்மதியாக வாழ வழிவகுப்பவர்கள். நம் தேசத்தின் பெருமையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கும் உண்மையான தேச பக்தர்கள் ராணுவ வீரர்களே. விசுவாசம், மரியாதை, கடமை, தன்னலமற்ற சேவை, தைரியம், நேர்மை போன்ற ராணுவ மதிப்புகள் இன்றைய மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.பள்ளியில் பயிலும் பல மாணவர்களுக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருக்கிறது. காரணம் ராணுவப் பணி என்பது நமது மனதிற்கு மிக நெருக்கமான பணி என்பதோடு நம் வாழ்வை பொருள் பொதிந்ததாக மாற்றும் பணியுமாகும்.தற்காலத்தில் பெற்றோர்களால் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட இன்ன பிற துறைப் படிப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ராணுவத் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது கசப்பான உண்மைதான்.பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே பாடத்திட்டத்தில் இந்திய ராணுவம் பற்றி விரிவாகக் கற்பிக்கப்பட வேண்டும். பீல்ட் மார்ஷல் கரியப்பா, பீல்டு மார்ஷல் மானெக்ஷா, ஜெனரல் திம்மையா போன்றவர்கள் முதல் தற்கால மேஜர் சரவணன் முதல் அபிநந்தன் வரை நாட்டின் நிஜ ஹீரோக்கள் பற்றி மாணவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மாணவர்களின் வாழ்க்கையைத் திசை திருப்பும் வண்ணத்திரையில் நடிக்கும் பொய் முகங்களுக்குப் போஸ்டர் ஒட்டிப் பாலாபிஷேகம் நடத்தும் இளைய சமுதாயம் திருந்தி கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடைய சமுதாயமாக மாற மாணவர்களுக்கு மேலை நாடுகளைப் போல ராணுவக் கல்வி அவசியமான ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை