கே.எம்.சி., பப்ளிக் பள்ளி நடத்திய மினி மாரத்தான்
திருப்பூர் : பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பள்ளி சார்பில், வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.பள்ளி தலைவர் சண்முகம் கொடியசைத்து துவக்கிவைத்தார். பள்ளி வளாகத்தில் துவங்கி பெருமாநல்லுார் நால் ரோடு வழியாக திருப்பூர் சாலை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. ஐந்து கி.மீ., துாரம் நடந்த இப்போட்டியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்ற மாணவர்களை தாளாளர் மனோகரன் வாழ்த்தினார். நிறைவில், பள்ளித் தலைவர், தாளாளர், தலைமைச்செயல் அதிகாரி சுவஸ்திகா ரட்சாம்பிகை, முதல்வர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கம், ரொக்கப்பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். பள்ளி முதல்வர் தனலட்சுமி முரளிதரன், வன விலங்கு பாதுகாப்பில் சமூகத்தின் பங்களிப்பு குறித்து பேசினார். பெருமாநல்லுார் எஸ்.ஐ., வசந்த குமார், மினி மாரத்தான் போட்டிக்கான பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொண்டார்.