கொங்கு வேளாளர் பள்ளி நடத்திய மினி மராத்தான்
திருப்பூர் : வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முன்னாள் மாணவர் சங்கம், நிழல்கள் அறக்கட்டளை ஆகியன இணைந்து, மினி மராத்தான் போட்டியை நடத்தின. பள்ளித் தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். வள்ளி ஸ்பின்னிங் மில் உரிமையாளர் திருநாவுக்கரசு, வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். பள்ளி முதல்வர் விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் வழிநடத்தினர். பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும், பங்கேற்றோர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.