மேலும் செய்திகள்
புதிய 7 பஸ்கள் வந்தாச்சு! இரு தினங்களில் இயக்கம்
06-Jun-2025
திருப்பூர்; மினி பஸ்கள் இயக்கத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என, நுகர்வோர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சிந்து சுப்ரமணியம், தமிழக முதல்வர், போக்குவரத்துத் துறை கமிஷனர், திருப்பூர் கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பிய மனு விவரம்:திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பகுதிவாரியாக அதைக் கட்டுப்படுத்தும் மற்றும் கண்காணிப்பை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொள்கின்றனர். புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பல தரப்பினரும் பயன் பெறுகின்றனர்.இந்த மினி பஸ்களில் வழித்தட வரைபடம், டிக்கெட் கட்டணம், இயக்கப்படும் நேரம் ஆகியன குறித்த அறிவிப்புகள் பயணிகள் கண்களில் படும் வகையில் அனைத்து பஸ்களிலும் வைக்கப்பட வேண்டும்.மினி பஸ்கள் இயக்கத்தில் உரிய வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை உரிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
06-Jun-2025