உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைந்த நீரிலும் புதினா சாகுபடி 

குறைந்த நீரிலும் புதினா சாகுபடி 

உடுமலை; உடுமலை கிளுவங்காட்டூர் சுற்றுப்பகுதிகளில், கீரை சாகுபடி பிரதானமாக உள்ளது. செம்மண் பரப்பில், குறைந்த தண்ணீரில், கீரைகளை சாகுபடி செய்து, உடுமலை உழவர் சந்தை உட்பட சந்தைகளுக்கு நாள்தோறும் அப்பகுதி விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில், இச்சாகுபடியில், அக்கிராம விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில், பருவமழை தீவிரமாக பெய்யாத நிலையில், கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் இருப்பு குறைந்தது. ஆனால், குறைந்த நீர் இருப்பையும் பயன்படுத்தி, புதினா உட்பட சாகுபடியை கைவிடாமல், விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'நடவு செய்த, 50ம் நாளில், இருந்து, புதினா இலைகளை அறுவடை செய்யலாம். பல்வேறு சத்துகளை உள்ளடக்கியுள்ளதால், புதினாவுக்கு எப்போதும் வரவேற்பு குறைவதில்லை. கீரை சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக அரசு மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ