மாயமான நபர் சடலமாக மீட்பு
பொங்கலுார் : பொங்கலுார் அருகே காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்.பொங்கலுார் ஒன்றியம், ராமே கவுண்டம்பாளையம் செட்டியப்பன் மகன் விஜயன், 20; மெக்கானிக். கடந்த 20ம் தேதி காணாமல் போய்விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் அவரை தேடி வந்தனர்.நேற்று மாலை பொங்கலூர் கரட்டுப்பாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.