உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டம் முழுவதும்  மிதமான மழை

மாவட்டம் முழுவதும்  மிதமான மழை

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக, 21.36 மி.மீ.,க்கு மிதமான மழையாக பதிவாகியுள்ளது.தாராபுரம் தாலுகா அலுவலக பகுதிகளில் 64 மி.மீ., - உப்பாறு அணைப்பகுதியில் 56; திருப்பூர் - அவிநாசி ரோடு கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில், 42; பல்லடம் தாலுகா அலுவலக பகுதிகளில் 41; திருப்பூர் - பல்லடம் ரோடு கலெக்டர் அலுவலக பகுதியில் 38; அவிநாசி தாலுகா அலுவலக பகுதியில் 30 மி.மீ., - திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 25; மடத்துக்குளம் தாலுகா அலுவலக பகுதியில் 22; குண்டடத்தில் 20 மி.மீ.,க்கு மிதமான மழை பெய்துள்ளது.ஊத்துக்குளி தாலுகா அலுவலக பகுதிகளில் 13.20; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 11; அமராவதி அணை பகுதியில் 10 மி.மீ.,க்கு லேசான மழை பதிவாகியுள்ளது.அமராவதி அணைக்கு வினாடிக்கு 306 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது; அணையில் மொத்தம் 90 அடியில், 85.96 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. திருமூர்த்தி அணைக்கு, வினாடிக்கு 930 கன அடி தண்ணீர் வருகிறது; நீர் மட்டம் 41.61 அடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ