மேலும் செய்திகள்
வெயிலும் சதம் அடிக்கும் மழையும் வெளுக்கும்!
17-May-2025
திருப்பூர்; 'திருப்பூரில் இந்த வாரம், மிதமான வானிலை நிலவும்' என, வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.அதன்படி, இன்று, 31ம் தேதி துவங்கி, 4ம் தேதி வரை திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 28 முதல், 29 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 23 முதல், 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 முதல், 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 70 முதல், 75 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு. இந்த வாரம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் அதிகளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது.பெய்யும் மழைநீரை வீணாக்காமல், பண்ணைக்குட்டை அமைப்பதன் வாயிலாக, நீரை சேமித்து, தேவையான நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
17-May-2025