உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நவீன செயற்கைக்கால்கள்

நவீன செயற்கைக்கால்கள்

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு, 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காதொலி கருவி வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு கலெக்டர் மணீஷ் நாரணவரே உதவி உபகரணங்களை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ