உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பஸ் டிரைவர், நடத்துனர்களின் மொபைல் பயன்பாடு கண்காணிப்பு

அரசு பஸ் டிரைவர், நடத்துனர்களின் மொபைல் பயன்பாடு கண்காணிப்பு

திருப்பூர்; அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர், பணியின்போது மொபைல்போன் பயன்படுத்துகின்றனரா என்பதை கண்காணிக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.''அரசு பஸ் டிரைவர்கள் பணியின் போது மொபைல்போன் பயன்படுத்தினால், 29 நாள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்'' என்ற எச்சரிக்கை அறிவிப்பை, தமிழக அரசு, கடந்த டிச., மாதம் வெளியிட்டது. இதை கண்காணிக்க, எட்டு கோட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திலும், ஏழு முதல், 12 பேர் வரையிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''பண்டிகை நாட்களில் மக்களுக்கு பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்ய வேண்டும் என்பதில், போக்குவரத்து கழகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அரசு பஸ் இயக்கும் போது டிரைவர் சிலர் மொபைல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுவதுடன், போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது. இவர்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதை உறுதி செய்ய மீண்டும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gajageswari
ஜன 16, 2025 09:45

பணிமனையில் செல்போன்களை வாங்கி வைத்துவிட்டுவது நல்லது.


Vijayan kkv
ஜன 16, 2025 06:20

முதலில் இரண்டு சக்கரவாகணத்தில் செல்வோர் நடந்துகொண்டேசெல்போன் பயன்படுத்துவோர் இவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுங்கள்


முக்கிய வீடியோ