உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பருவமழை 8.8 மி.மீ., அதிகரிப்பு; விதை, உரங்கள் இருப்பு திருப்தி

பருவமழை 8.8 மி.மீ., அதிகரிப்பு; விதை, உரங்கள் இருப்பு திருப்தி

உடுமலை; பருவ மழை அதிகரித்துள்ள நிலையில், சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 618.20 மி.மீ.,ஆகும், இம்மாத இறுதி வரை, சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு, 198.20 மி.மீ.,ஆகும். நடப்பாண்டு, நேற்று வரை, 207 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவை விட கூடுதலாக, 8.80 மி.மீ., கிடைத்துள்ளது. அதே போல், சாகுபடிக்கு தேவையான, நெல் விதை 36.69 டன், தானிய பயிறுகள் 15.18 டன், பயிறு வகை பயிறுகள் 62.97 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 38.24 டன் இருப்பு உள்ளது. சாகுபடி பயிர்களுக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது. அதன்படி, யூரியா, 2,290 டன், டி.ஏ.பி., 827 டன், காம்ப்ளக்ஸ் உரம், 5, 171 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 833 டன் அளவு இருப்பு உள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ