கந்துவட்டி கேட்டு மிரட்டல்; மாற்றுத்திறனாளி தாய் புகார்
திருப்பூர்; பல்லடம், கரைப்புதுாரை சேர்ந்த சுமதி. இவர், தனது மாற்றுத்திறனாளி மகளான கவிதாவுடன் வந்து, கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக மனு அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவர் பொன்னுசாமி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மனவளர்ச்சி குன்றிய மகளுடன் வசித்துவருகிறேன். அருள்புரம், கரைப்புதுாரை சேர்ந்த பெண்ணிடம், 3.10 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். வாங்கிய கடனில் 2.45 லட்சம் ரூபாயை மூன்று மாதத்துக்குள் திருப்பி கொடுத்துவிட்டேன். மீதம் 65 ஆயிரத்துக்கு பதிலாக, 2 லட்சம் ரூபாய் கந்து வட்டி கேட்டு மிரட்டுகின்றனர். எனவே, கந்து வட்டி கேட்டு மிரட்டும் பெண் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது மாற்றுத்திறனாளி மகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.