உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாய்மை துளிர் அமுது திட்டம்

தாய்மை துளிர் அமுது திட்டம்

பல்லடம்; பல்லடம் ரோட்டரி ரெயின்போ சார்பில் கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் மேற்கு பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கப்பட்டது. ரோட்டரி ரெயின்போ சங்க 'தாய்மை துளிர் அமுது' திட்டத்தலைவர் கோகிலாவாணி தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் கதிர்வேல் வரவேற்றார். மருத்துவர் அபுதாகிர் முன்னிலை வகித்தார். ரோட்டரி ரெயின்போ துணை கவர்னர் ஆறுமுகம் பேசுகையில், ''கர்ப்பிணிகளுக்கு, மதிய உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளோம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு, தாய்மை துளிர் அமுது திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை