மேலும் செய்திகள்
ஜீரோ பேலன்ஸ் : கடன் கற்றுத்தரும் பாடங்கள்
01-Dec-2025
திருப்பூர்: பெருமாநல்லுாரை சேர்ந்தவர் செல்வி. கணவர் மணியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார். செல்வி கூறியதாவது: மகன் பார்த்திபன் பி.இ., படிப்புக்காக, கடந்த 2013ல், பெருமாநல்லுாரிலுள்ள பொதுத்துறை வங்கி கிளையில், 1.30 லட்சம் ரூபாய் கல்விக்கடன் பெற்றிருந்தோம். 2019ல் ஏற்பட்ட வாகன விபத்தில், ஒரே மகனை பறிகொடுத்துவிட்டோம். மகன் இருந்திருந்தால், நல்ல வேலைக்குச் சென்று, வங்கியில் வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்தியிருப்பான். நெசவு தொழிலாளியான கணவரின் வருவாய், எங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே சரியாக உள்ளது. வங்கியிலிருந்து தொடர்ந்து போனில் அழைத்து, வட்டியோடு சேர்த்து 4 லட்சம் ரூபாய் செலுத்தக்கோரி அழுத்தம் கொடுக்கின்றனர். மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். அரசு, கல்விக்கடனை தள்ளுபடி செய்து, ஏழை நெசவு தொழிலாளியான எங்களுக்கு கைகொடுக்கவேண்டும்.
01-Dec-2025