உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகன ஓட்டிகள் தடுமாறும் பழங்கரை - ரங்கா நகர் ரோடு

வாகன ஓட்டிகள் தடுமாறும் பழங்கரை - ரங்கா நகர் ரோடு

அவிநாசி: 'ரங்கா நகர் செல்லும் ரோடு படுமோசமான நிலையால், பொதுமக்கள், பாதசாரிகள் பாதிக்கின்றனர்' என, நுகர்வோர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, ரங்கா நகர் செல்லும் தார் ரோடு, சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. இதில், 3 கி.மீ., அளவுக்கு ரோட்டில் போடப்பட்டுள்ள தார் பெயர்ந்து, ரோடு, மோசமான நிலைக்கு மாறியுள்ளது.டூவீலர்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு, ரோட்டின் நிலை படுமோசமாக உள்ளது. தினசரி ஏராளமான பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள், இந்த ரோட்டின் வழியாக சென்று வரும் நிலையில், வாகன ஓட்டிகள் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது.இது குறித்து, திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், 'ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ரங்கா நகர் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதனை விரைந்து செப்பனிட வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ