உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிடப்பில் ரயில் திட்டங்கள்; எம்.பி., சுப்பராயன் கடிதம் 

கிடப்பில் ரயில் திட்டங்கள்; எம்.பி., சுப்பராயன் கடிதம் 

திருப்பூர்; திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:திருப்பூர் லோக்சபா தொகுதியில், அந்தியூர், பவானி, கோபிச்செட்டிபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, இரண்டு ரயில்வே திட்டங்கள், கிடப்பில் போடப்பட்டுள்ளது.சத்தியமங்கலம் - கோபி - ஈரோடு இடையே, உள்ள 69.3 கி.மீ., இடையே அகல ரயில்பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது; பிறகு நடவடிக்கை இல்லை. இவ்வழித்தடத்தில், எட்டு ரயில்வே ஸ்டேஷன்கள் அமையும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.சத்தியமங்கலம் - அந்தியூர் - மேட்டூர் ரயில் திட்டம் தொடர்பான ஆய்வு முடிந்து, 2006ல் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்களுடன் கூடிய இத்திட்டத்தில், அதன் பிறகு நடவடிக்கை இல்லை.இரு திட்டங்களையும் செயல்படுத்தினால், மூன்று தொகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். மஞ்சள், பருத்தி, வாழை மற்றும் பூக்கள் போன்ற விளை பொருட்களை, அருகே உள்ள நகர்ப்பகுதிக்கு கொண்டு செல்வது எளிதாகும்.இத்தொகுதிகளை, ஈரோடு சந்திப்புடன் இணைத்தால், நாட்டின் அனைத்து பகுதிகளுடன் இணைப்பு ஏற்படும். மூன்று தொகுதிகளை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் உயர, இரண்டு ரயில் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ