உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வளைய பந்து போட்டி எம்.எஸ்., வித்யாலயா அபாரம் 

வளைய பந்து போட்டி எம்.எஸ்., வித்யாலயா அபாரம் 

திருப்பூர் : அவிநாசி குறுமைய அளவிலான வளைய பந்து போட்டியில், அவிநாசி எம்.எஸ்., வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில் 14 வயது மாணவியர் பிரிவில், ஹன்சிகா மற்றும் பூஜனா ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். 17 வயது பிரிவில், பிரகதிஷா மற்றும் நேகா ஆகியோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், முதலிடம் பெற்றனர். மேலும் 19 வயது பிரிவில், ரோஷிணி மற்றும் ஜெய்ஹரிணி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடமும், இரட்டையர் பிரிவில் முதலிடமும் பெற்றுள்ளனர். மாணவர் 14 வயது பிரிவில், பிரிவில் அட்சயன் மற்றும் ஜீவப் பிரியன் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடமும், இரட்டையர் பிரிவில் முதலிடமும் பெற்றனர். இதில் 17 வயது பிரிவில், ராகவேந்திரா மற்றும் சுதேஷ் ஆகியோர் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். மேலும் 19 வயது பிரிவில், சபரிஸ்ரீமற்றும் தருண்தேவ் ஆகியோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். ெவற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ஸ்ரீதா, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ