உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலத்தின் கீழ் தேங்கும் சகதி; வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்

பாலத்தின் கீழ் தேங்கும் சகதி; வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்

திருப்பூர்; ஒற்றைக் கண் பாலம் சேறும் சகதியுமாக மாறிக்கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்பூர் ரயில்வே பாதையைக் கடந்து செல்லும் வகையில், ஊத்துக்குளி ரோட்டிலிருந்து எம்.ஜி.ஆர்., நகர் பகுதிக்கு இடையே ரயில்பாதையின் கீழ் ஒற்றைக் கண் பாலம் அமைந்துள்ளது.கேட் தோட்டம், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளுக்குச் செல்லும் வழியில் இந்த பாலம் உள்ளது. இவ்வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், ஏராளமான பாதசாரிகள் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் சிறிதளவு லேசான துாறல் மழை பெய்தால் கூட இப்பாலத்தின் கீழ் கடந்து செல்லும் கழிவு நீர் வாய்க்கால் நிரம்பி மழை நீருடன் சேர்ந்து தேங்கி நின்று விடுகிறது.இதனால் இப்பாலத்தின் இரு புறங்களிலும் பல மீட்டர் துாரத்துக்கு சேறும் சகதியுமாக மாறி விடுவதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். பாலத்தின் கீழ்பகுதியில் மழை நீர் தேங்காமலும், சேறும் சகதியுமாக மாறி அவதிப்படுத்தாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arun Kumar
ஜன 23, 2025 23:46

5 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு 5 கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலைமை தான் உள்ளது தயவு செய்து இந்த கோரிக்கைகளை சரி செய்யவும்


அப்பாவி
ஜன 22, 2025 11:09

இந்த லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்னுட்டு பேண்ட்டும், சூட்டுமா திரிவாங்களே அவிங்க இதை சரி செய்ய மாட்டாங்களா?


புதிய வீடியோ