உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.பல கோடி மோசடி வழக்கு: தலைமறைவு ஆசாமி கைது

ரூ.பல கோடி மோசடி வழக்கு: தலைமறைவு ஆசாமி கைது

பல்லடம்: பல்லடத்தை அடுத்த, வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் விஜயகுமார் 40, சிவகுமார், 43 மற்றும் விஜயகுமார் மகன் பாலாஜி, 28 ஆகிய மூவரும் கூட்டாக இணைந்து, நுாற்பாலைத் தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி, பலரது சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தனர். கடந்த, 2022ம் ஆண்டு நடந்த இந்த மோசடியால், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், விஜயகுமார், சிவகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சிவகுமார், பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த ஆண்டு டிச., மாதம் முதல் தலைமறைவான நிலையில், கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. சிவகுமாரை தேடி வந்த போலீசார், நேற்று முன்தினம், பல்லடம் அருகே லட்சுமி மில் பகுதியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த போலீசார், நீதிபதி உத்தரவின் பேரில், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி