உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மா.கம்யூ., ஒத்திகை அணிவகுப்பு 

மா.கம்யூ., ஒத்திகை அணிவகுப்பு 

திருப்பூர் : மா.கம்யூ., கட்சியின், 24வது அகில இந்திய மாநாடு, மதுரையில், ஏப்., 2ல் துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டின் நிறைவு நாளில், பிரமாண்ட செந்தொண்டர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, மாவட்டம் வாரியாக நேற்று, அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.பகத்சிங் நினைவு நாளான நேற்று, திருப்பூர் குமரன் சிலை அருகே, கட்சியின் தொண்டர் படையினர், சீருடை அணிந்து, கொடியுடன் அணிவகுத்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், அணிவகுப்பு ஒத்திகையை துவக்கி வைத்தார். அணிவகுப்பை வரவேற்று, செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாரன் மற்றும் முத்துக்கண்ணன் ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ