உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திடீரென இடிந்து விழுந்த நகராட்சி வணிக வளாகம்: சேதமடைந்த ரோட்டில் அவதிக்குள்ளாகும் மக்கள்

திடீரென இடிந்து விழுந்த நகராட்சி வணிக வளாகம்: சேதமடைந்த ரோட்டில் அவதிக்குள்ளாகும் மக்கள்

உடுமலை: உடுமலை நகராட்சி வணிக வளாகத்தின் ஒரு பகுதி, திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை தளி ரோடு, நகராட்சி அலுவலகம் அருகில், நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இவ்வளாகத்தில், ரேஷன் கடைகள், காஸ் ஏஜென்சிகள், பேக்கரி, ஹோட்டல் என நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகராட்சி திருமண மண்டபத்திற்கு செல்லும் வழித்தடமும் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியிலுள்ள வணிக வளாகம், 1981ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 45 ஆண்டுகளுக்கு மேலான இக்கட்டடம், பராமரிப்பின்றியும், பழமையானதாகவும் மாறி, சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை புதுப்பிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக நகராட்சிக்கு வாடகை செலுத்தி பயன்படுத்தி வரும் வணிக நிறுவன உரிமையாளர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, ஏற்கனவே சிதிலமடைந்து காணப்பட்ட பழமையான வணிக வளாகத்திலுள்ள கான்கிரீட் அமைப்புகள் திடீரென நேற்று கீழே விழுந்தது. இதனால், வணிக வளாகத்திலிருந்த கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விழுந்த கான்கிரீட் கட்டுமானம் பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே, உடனடியாக இடிந்த கட்டுமானங்களை அகற்றவும், வணிக வளாகத்தை புதுப்பிக்கவும், முழுமையாக இடித்து அகற்றி, புதிதாக கட்டவும் வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை