கந்தசஷ்டி புத்தகத்துடன் முருக பக்தர் மாநாடு அழைப்பு
பல்லடம்; ஹிந்து முன்னணி சார்பில், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வரும், 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்லடம் வட்டார பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.அழைப்பிதழுடன், கந்தசஷ்டி கவச புத்தகமும் வழங்கப்படுகிறது. பல்லடம் நகராட்சி, 18வது வார்டு கவுன்சிலர் சசிரேகா தலைமையில், பா.ஜ.,வினர் வீடு வீடாகச் சென்று, முருக பக்தர்கள் மாநாட்டில்பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.