உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முத்து மாரியம்மனுக்கு சித்திரை விழா; வரும் 6ம் தேதி திருக்கல்யாணம்

முத்து மாரியம்மனுக்கு சித்திரை விழா; வரும் 6ம் தேதி திருக்கல்யாணம்

குடிமங்கலம்; பூளவாடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாண உற்சவம் வரும் 6ம் தேதி நடக்கிறது.உடுமலை அருகே பூளவாடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோவிலில், சுற்றுப்பகுதி கிராம மக்களால், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு திருவிழா வரும் 5ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. அன்று காலை, 10:20 மணிக்கு தீர்த்தம் எடுத்து வர செல்கின்றனர். இரவு, 9:00 மணிக்கு திருக்கம்பம் நடப்படுகிறது.வரும் 6ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம், காலை, 10:00 மணிக்கு திருமஞ்சனம், காலை, 11:00 மணி முதல் தீர்த்தம் செலுத்துதல், மாலை, 6:00 மணிக்கு அம்மன் அழைப்பு, இரவு, 8:00 மணி முதல், 9:00 மணி வரை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும் 7ம் தேதி மாவிளக்கு, பூவோடு செலுத்துதல், அம்மன் திருக்கோவில்களுக்கு எழுந்தருளல், திருக்கம்பம் கங்கையில் விடுதல் நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு 7:30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிேஷகம், ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை