மேலும் செய்திகள்
உள்ளம்கவர் உயிரோவிங்களின் கண்காட்சி
07-Dec-2024
திருப்பூர்: திருப்பூர், குமரன் மகளிர் கல்லுரியில் நடந்த கலையாஞ்சலி நிகழ்ச்சியில், மாணவிகளின் நக ஓவியம், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், கலையாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவியர் மத்தியில் புதைந்துள்ள பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில், ஓவியம், இசை, நடனம், குழுப்பாட்டு மற்றும் தனிப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நகத்தில் ஓவியம் வரையும் போட்டியும் நடத்தப்பட்டது.மிகச்சிறிய நகத்தில் மிகப்பெரிய தத்துவத்தை சொல்லும் வகையில் மாணவியர் ஓவியம் வரைந்திருந்தனர். பெண்ணின் கருவில், 10 மாதம் வளரும் குழந்தையின் வடிவத்தை, 10 விரல்களில் ஓவியமாக வரைந்து அசத்தியிருந்தார் ஒரு மாணவி. ஐந்து விரல்களிலும், ஐந்து பழங்களை வரைந்து, ஆச்சர்யமூட்டியிருந்தார் இன்னொரு மாணவி. இப்படி மாணவிகள் தனியாகவும், குழுவாகும் இணைந்து, பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய ஓவியங்களை நகரங்களில் வரைந்திருந்தனர்.---திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் நடந்த கலையாஞ்சலி நிகழ்ச்சியில், நகத்தில் ஓவியம் வரையும் போட்டி நடந்தது. கலைவண்ணங்களாக காட்சியளித்த மாணவியரின் நகங்கள்.
எங்கும், எதிலும் கலையை வெளிப்படுத்த முடியும். சிறிய அரிசியில் ஓவியம் வரைந்தால் கூட, அதுவும் கலை தான். நகம், முடி மற்றும் தோல் ஆகியவை அழகு கலையில் முக்கியத்துவம் பெறுகிறது. பலர் நகம் வளர்ப்பதில்லை. எனவே, செயற்கையாக வளரும் நகத்தை வாங்கி, அதில் ஓவியம் வரைந்து, நகத்தில் பொருத்திக் கொள்கின்றனர். குமரன் கல்லுாரி மாணவிகள், மிக நேர்த்தியாக நகத்தில் ஓவியம் வரைந்திருந்தனர். குடும்பம், இயற்கை, உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஒவ்வொருவரின் ஓவியமும் நினைவூட்டியது.- நடுவராக செயல்பட்ட விஜி கணேசன்.
07-Dec-2024