மேலும் செய்திகள்
ஹார்டுவேர்ஸ் கடையில் நள்ளிரவில் பற்றிய தீ
30-Jul-2025
திருப்பூர்; காதர்பேட்டை அருகே உள்ள, நஞ்சப்பா ரோடு, ஞாயிற்றுக்கிழமையில் பனியன் மார்க்கெட்டாக செயல்படுகிறது. அதிக அளவு பனியன் வியாபாரிகள் ரோட்டோர கடை அமைத்து, நாள் முழுவதும் விற்பனை செய்கின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள், பனியன் ஆடைகளை வாங்கி செல்கின்றனர். நஞ்சப்பா பள்ளி ரோட்டின் இருபுறமும், ஏராளமான கடைகள் இருப்பதால், ரோட்டின் மத்தியில் 'டூ வீலர்'கள் மற்றும் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டன. இதனால், போக்குவரத்து பாதிப்பாக புகார் எழுந்தது. அதன்படி, ரோட்டின்மையத்தில், இரும்பு சென்டர் மீடியன் வைக்கப்பட்டது. இருப்பினும், காதர்பேட்டை பகுதிக்கு வருவோர் வாகனம் நிறுத்த, பார்க்கிங் வசதியில்லாததால், நஞ்சப்பா பள்ளி ரோட்டில், சென்டர்மீடி யன் அருகே, இருபுறமும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், ராயபுரம் பகுதி வழியாக சென்று வருவோர், நஞ்சப்பா பள்ளி ரோட்டை கடந்து செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,'நஞ்சப்பா பள்ளி ரோட்டில், விடுமுறை நாளில், ரோட்டை ஆக்கிரமித்து கடை நடத்துவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், டூ வீலர்களை ரோட்டின் மையத்தில் பார்க்கிங் செய்வதால், அவ்வழியாக சென்றுவர முடிவதில்லை; வீண்வாக்குவாதம் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து, நஞ்சப்பா பள்ளி ரோட்டை மறிக்கும் அளவுக்கு, வாகனங்கள் பார்க்கிங் செய்வதை தடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், காதர்பேட்டை அருகே, பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.
30-Jul-2025