நாதம்பாளையம் மாரியம்மன் கோவில்
அவிநாசி அடுத்த நாதம் பாளையத்தில்(சுதந்திரநல்லுார்) உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பொட்டுச்சாமி பொங்கலுடுன் துவங்கியது. நேற்று அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், கம்பம் கங்கையில் விடுதல், அலங்கார பூஜை, திருக்கல்யாணம் ஆகியவை நடந்தன. இன்று மஞ்சள் நீர் விழா, மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.