உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய, சர்வதேச தரச்சான்று பெற்ற லிட்டில் கிங்டம் பள்ளி! மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம்

தேசிய, சர்வதேச தரச்சான்று பெற்ற லிட்டில் கிங்டம் பள்ளி! மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம்

''ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட நலன் காப்பதில் அறிவியல் ரீதியாக, உளவியல் ரீதியாக செயல்படுகிறோம்'' என்கிறார், திருப்பூர், 15 வேலம்பாளையம், சோளிபாளையம் பகுதியில் செயல்படும் லிட்டிங் கிங்டம் பள்ளி நிறுவனர் மற்றும் சீனியர் முதல்வர் டாக்டர் ேஹமா தேவராஜன்.அவர் மேலும் கூறியதாவது:பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை கற்றுத்தர வேண்டியது, பெற்றோரின் கடமை. அவர்களுக்கு 'மொபைல் போன்' வாங்கிக் கொடுத்தாலும், அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டியதும் பெற்றோரின் பொறுப்பு.பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்படும் போது தான், மாணவ, மாணவியரின் நலன், முழு அளவில் மேம்படும். இதுகுறித்த விழிப்புணர்வை, பெற்றோரிடம் வலியுறுத்தும் வகையில் மாதம் ஒருமுறை பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்துகிறோம்.எங்கள் பள்ளி, வெள்ளி விழா ஆண்டில் வெற்றிகரமாக பயணிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அறிவியல் பூர்வமான, உளவியல் ரீதியான கல்வி பயிற்று விப்பு முறை தான். எங்கள் பள்ளிக்கு, 'அக்ரிடேஷன்' என்ற தேசிய தரச்சான்று வாங்கியுள்ளோம்.தமிழகத்தில் உள்ள, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், 8 பள்ளிகள் மட்டுமே இச்சான்று பெற்றுள்ளன; அதில் எங்கள் பள்ளியும் ஒன்று. இதற்கும் மேலாக, சர்வதேச தரச்சான்றும் வாங்கி யுள்ளோம். 'க்யூ.எஸ்., கோல்டு' ரேட்டிங் பெற்றுள்ளோம்.இதன் வாயிலாக வெளிநாடுகளில் உள்ள பல்கலை-யில், இணைந்து படிக்க விரும்பும் எம் பள்ளி மாணவ, மாணவியருக்கு அட்மிஷனில் முன்னுரிமை கிடைக்கும். திறமை தான் ஒருவரை வெற்றியாளராக மாற்றுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாணவனின் திறமையை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டுக் கொள்கிறோம்.குழந்தையின் கற்பிக்கும் ஆற்றல் எந்த முறையில் இருக்கிறது, எது மாதிரி பயிற்றுவித்தால் எளிதில் புரிந்து கொள்வார்கள், அவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றல், மூளை செயல்பாடு ஆகியவற்றை உளவியல் ரீதியாக அறிந்து, ஆவணப்படுத்தி உள்ளோம்.அந்த அடிப்படையில் பாடம் பயிற்றுவிக்கும் போது, ஒவ்வொரு மாணவ, மாணவியரின் திறமைக்கேற்ப தங்களின் எதிர்காலத்தை பிரகாசமாக அமைத்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. கல்விக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் விளையாட்டுக்கும் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை