உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய உறைவாள் போட்டி குமுதா பள்ளி மாணவி அபாரம்

தேசிய உறைவாள் போட்டி குமுதா பள்ளி மாணவி அபாரம்

திருப்பூர்: தேசிய அளவிலான உறைவாள் சண்டை (sqay) போட்டி, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் நடந்தது.ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 55 பேரில் குமுதா பள்ளியைச் சேர்ந்த மாணவி நேத்ரா, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இரு போட்டிகளில், மூன்றாம் இடம் பிடித்து இரண்டு வெண்கலப்பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.மாணவியை, பள்ளித் தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை