தேசிய வருவாய் வழி திறன்; படிப்பு உதவி திட்ட தேர்வு
திருப்பூர்; அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) பிப்., 22ம் தேதி நடக்கவுள்ளது.அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய கட்டணத்தொகை, 50 ரூபாய் சேர்த்து, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஜன., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.