தேசிய விண்வெளி நாள் செய்தி...6
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது. 1996க்கு பின், தொழில்நுட்ப புரட்சி வேகமாக ஏற்பட்டு வருகிறது; நிறைய புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. மேலை நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெற்று வருகிறோம். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, பயன்பாடு என்பது, கிராமப்புற மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில், ஆர்வம் காட்டி வருகிறோம். கிராமப்புறங்களில் இருந்தும் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என்பதை தான், முதல்வரும் அறிவுறுத்துகிறார். தேசிய அளவில் பல்வேறு இடங்களில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளில், அரசுப்பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கிறோம்.விண்வெளி ஆய்வு உள்ளிட்ட அறிவியல் சார்ந்து நிறைய படிப்புகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்களில் உயர் பொறுப்பில் உள்ள விஞ்ஞானிகள் பலர், தமிழகத்தை சேர்ந்தவர்கள்; அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சி சார்ந்து நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. அதுபோன்ற படிப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கி வருகிறோம். - ஈஸ்வரமூர்த்தி, எம்.பி.,உறுப்பினர், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கமிட்டி