உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சில வரி செய்திகளில் நவரசம்

சில வரி செய்திகளில் நவரசம்

1.போலீசாருக்கு ஹெல்மெட்திருப்பூர் மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக, போலீஸ் ரோந்து பீட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், இரு சக்கர வாகனங்களில், 24 மணி நேரமும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'டெடிகேட்டட் பீட்' திட்டத்தில் மாநகர பகுதிகளில் ரோந்து செல்லும் போலீசார் பயன்பாட்டுக்காக, திருப்பூர் தெற்கு ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்கம் சார்பில், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 50 ஹெல்மெட்கள் வழங்கப்பட்டுள்ளன. தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம் தலைமையிலான ரோட்டரி பிரதிநிதிகள், போலீஸ் கமிஷனர் லட்சுமியிடம் ஹெல்மெட்களை வழங்கினர்.---மரக்கன்று நடும் விழா (படம்)2.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, செயின்ட் ஜோசப் கல்லுாரியில், அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது. திருப்பூர் வேர்கள் அமைப்பு சார்பில், கல்லுாரி வளாகத்தில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. பயனுள்ள வகையில், 20க்கும் அதிகமான ரகங்களில் மரக்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வேர்கள் அமைப்பினர், கடந்த ஒரு வாரமாக, முன்னேற்பாடுகளை துவக்கியிருந்தனர். கல்லுாரி நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள், வேர்கள் அமைப்பினரால், நேற்று காலை, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. முன்னதாக, மரக்கன்றுகள் நட்டு வளர்த்து, நாட்டின் பசுமைப்பரப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.---மாணவருக்கு ஆதார் அப்டேட் (படம்)3.திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் ஆதாரில், பயோமெட்ரிக் பதிவுகள் அட்டேட் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் மாணவர்களின் ஆதார் பதிவு புதுப்பித்தல் பணிகளுக்காக, 25 ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் - தாராபுரம் ரோட்டிலுள்ள அரண்மனைபுதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு ஆதார் முகாம் துவங்கியுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்வரை, இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், பள்ளி மாணவ, மாணவியர்களின் ஆதாரில், கைரேகை, கண் கருவிழி அப்டேட் செய்யப்படுகிறது.கனரா வங்கி தாராளம்4.திருப்பூர் மாநகராட்சி, டி.எஸ்.கே., மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு, அறுவை சிகிச்சை அரங்குடன் இயங்கி வருகிறது. அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தும் வகையில், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 'மல்டி பேரா மானிட்டர்' கருவி இரண்டு கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது. மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில், இதனை கனரா வங்கி மேலாளர் சந்தீப்குமார் சின்ஹா நேற்று வழங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சி.எஸ்.ஆர்., நிதியில் இக்கருவிகள் வழங்கப்பட்டதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.---சுற்றுச்சூழல் குழு வலியுறுத்தல்5.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, திருப்பூர் ரோட்டில் உள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் இருந்த வேப்ப மரம் வெட்டி அழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில், வளர்ந்த வேட்டமரத்தை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை சேர்ந்தவர்கள் வெட்டியுள்ளனர். இதுதவிர, மேற்கு வீதி, செல்லாண்டியம்மன் கோவில் வீதியில், மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வளர்க்கப்படும் மரங்களை வெட்டி அழிப்பதை தடுக்க வேண்டும்; மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊத்துக்குளி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.---கோவில் உண்டியல் மாயம்6.பல்லடம் அருகே காரணம்பேட்டையில், கூப்பிடு பிள்ளையார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், பூஜைகள் முடிந்து வழக்கம்போல் இரவு நடை சாற்றப்பட்டது. நேற்று காலை கோவில் திறந்தபோது, சிமென்ட் பூச்சுடன் இருந்த உண்டியலை யாரோ திருடி சென்று விட்டனர். பல்லடம் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கோவிலுக்கு அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து சாவகாசமாக மது அருந்திவிட்டு, அதன்பின், உண்டியலை திருடி சென்றதற்கான அடையாளங்களை போலீசார் கண்டறிந்தனர். அருகிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' காட்சிகளைக் கொண்டு, உண்டியல் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மருத்துவ சிகிச்சை முகாம் 7.'துாய்மயே சேவை - 2024' திட்டத்தின் கீழ், துாய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கும் வகையில், முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலம், வேலம்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தில் நேற்று இம்முகாம் நடந்தது. முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். முகாமை மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநகர நல அலுவலர் கவுரி சரவணன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.---பாலிதீனுக்கு 'குட் பை!'8.திருப்பூர் மாநகர மார்கெட் வியாபாரிகள் சங்கம், மாநகராட்சி சுகாதார துறை இணைந்து, 'நெகிழி இல்லா திருப்பூர்' சார்பில் இலவச மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். மார்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த அனைவருக்கும், மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 'துாய்மையே சேவை - 2024' திட்டத்தின் கீழ், வடக்கு உழவர் சந்தையில், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமர், மேயர் தினேஷ் குமார், மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.---விவசாயிகளுக்கு பயிற்சி9. திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் கிராமத்தில், 'அட்மா' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடத்தப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி, வரவேற்றார். கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக பூச்சியல் துறை இணை பேராசிரியர் கண்ணன், துணை வேளாண்மை அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர் சரவணன், வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினார். அட்மா திட்டப்பணியாளர்கள் தனலட்சுமி, கெத்தியாள், டயானா ஆகியோர் அட்மா திட்டம் குறித்து விளக்கினர். பயிற்சி நிறைவில், தொரவலுார் விவசாயி சுரேஷ் தோட்டத்துக்கு சென்று விஞ்ஞானிகள், அலுவலர்கள் பார்வையிட்டனர்.திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் கிராமத்தில், 'அட்மா' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடத்தப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி, வரவேற்றார். கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக பூச்சியல் துறை இணை பேராசிரியர் கண்ணன், துணை வேளாண்மை அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர் சரவணன், வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினார். அட்மா திட்டப்பணியாளர்கள் தனலட்சுமி, கெத்தியாள், டயானா ஆகியோர் அட்மா திட்டம் குறித்து விளக்கினர். பயிற்சி நிறைவில், தொரவலுார் விவசாயி சுரேஷ் தோட்டத்துக்கு சென்று விஞ்ஞானிகள், அலுவலர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ