மேலும் செய்திகள்
இன்று தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
06-Jan-2025
திருப்பூர்; பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி, திருப்பூரில் தே.மு.தி.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசாக வழங்கப்படும் தொகை, இவ்வாண்டு இதுவரை அறிவிக்கபடாத நிலையில், குடும்பத்தினருக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., வினர் சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். இளைஞரணி மாநில துணை செயலாளர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Jan-2025