புதுப்பிப்பு அவகாசம் தேவை
சென்னையில் உள்ள மாநில உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2019ன் கீழ், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் இணை செயலாளர் அன்பழகன், 'மாவட்ட, மாநில நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள், நுகர்வோர் நலன் சார்ந்து, நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு உரிய சமயத்தில் தீர்வு காண முன்வர வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் பதிவு புதுப்பிப்பை ஆண்டுதோறும் மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.