உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபாய மின் கம்பங்கள் அகற்றாமல் அலட்சியம்

அபாய மின் கம்பங்கள் அகற்றாமல் அலட்சியம்

சாய்ந்தால் ஆபத்துதிருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் பாலத்தின் மேல் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.- செந்தில்குமார், புது மார்க்கெட் வீதி.n திருமுருகன்பூண்டி, எஸ்.டி., ரோடு சந்திப்பு ஸ்டாப்பில் மின்கம்பம் சாய்ந்து, விழும் நிலையில் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.- விஜி, கூட்டுறவு நகர்.கரடுமுரடு தரைத்தளம்திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா ரவுண்டானா பஸ் ஸ்டாப் நிழற்குடை கற்களுடன் கரடுமுரடாக உள்ளது. பயணிகள் தடுக்கி விழும் நிலையில் உள்ளது. தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும்.- சித்ரகலா, அவிநாசி ரோடு.குப்பைகள் தேக்கம்திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் கால்வாய் அடைப்புகளை சரிவர சுத்தம் செய்வதில்லை. குப்பைகள் அப்படியே தேங்கியிருப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- முருகேசன், கொங்கு மெயின் ரோடு.பணிகள் மந்தம்மாதப்பூர் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் காலனியில் கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழி அப்படியே விடப்பட்டுள்ளது. பணிகள் மந்தமாக நடக்கிறது.- பாலுசக்தி, கிருஷ்ணாபுரம் காலனி.கண்ணாடி சேதம்திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்டில் முகப்பு பகுதியில் கண்ணாடி சேதமாகியுள்ளது. கண்ணாடியை மாற்ற வேண்டும்.- ஈஸ்வரன், மத்திய பஸ் ஸ்டாண்ட்.சுகாதாரச் சீர்கேடுதிருமுருகன்பூண்டி - பூலுவபட்டி மெயின் ரோட்டில்,இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஸ்டாப் அருகே கழிவுநீர் கால்வாய் இல்லை. கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.-- ஈஸ்வரமூர்த்தி, பூலுவபட்டி. (படம் உண்டு)சாலை சேதம்திருமுருகன்பூண்டி - பெரியாயிபாளையம் ரிங் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது. இவ்வழியில் உள்ள குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.- சுப்ரமணியம், பெரியாயிபாளையம்.பல்லாங்குழி சாலைதிருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் ரோடு சேதமாகியுள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- செல்வராஜ், தென்னம்பாளையம்.தோண்டப்படும் சாலைதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை பஸ் ஸ்டாப் அருகே அடிக்கடி சாலை தோண்டப்படுகிறது. வாகன போக்குவரத்து நிறைந்துள்ளதால், பணிகள் முடிந்தவுடன் உடனடியாக 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- ஆரோக்கியராஜ், மண்ணரை.கம்பங்களை மாற்றுங்கள்திருப்பூர், 43வது வார்டு, கருவம்பாளையம், எல்.ஆர்.ஜி., லே-அவுட் மூன்றாவது வீதியில் சாக்கடை கால்வாய் பணிக்கு குழி தோண்டப்பட்டு வருகிறது. மின் கம்பங்களை மாற்றியமைக்காமல் அப்படியே பணி நடக்கிறது.- செந்தில்குமார், எல்.ஆர்.ஜி., லே-அவுட்.பராமரிப்பற்ற தொட்டிவீரபாண்டி, ஏ.டி., காலனியில் நபார்டு திட்டத்தில் 2007ல் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிக்காமல் அப்படியே உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு, பராமரிக்க வேண்டும்.- அருணாச்சலம், வீரபாண்டி.கொசுத்தொல்லைபிச்சம்பாளையம், கந்தசாமி லே-அவுட் இரண்டாவது வீதியில், சாலையை ஆக்கிரமித்து கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கொசுத்தொல்லை அதிகமாகிறது.- சிந்துஜா, கந்தசாமி லே-அவுட்.ரியாக் ஷன்சுத்தமானது கால்வாய்அங்கேரிபாளையம், டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.- சபரீஸ், டீச்சர்ஸ் காலனி.சீரானது உடைப்புதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் - அணைக்காடு ஸ்டாப் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், குழாய் உடைப்பு சீர்செய்யப்பட்டுள்ளது.- சங்கர்சதீஷ், அணைக்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை