உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவு பொருட்கள் 1 அல்லது 2சி அவசர கதி உணவுகள்: ஆபத்துக்கு உத்தரவாதம்

உணவு பொருட்கள் 1 அல்லது 2சி அவசர கதி உணவுகள்: ஆபத்துக்கு உத்தரவாதம்

பகல் விலகி மாலை நேரம் துவங்கியதும், வீதி, தெருக்கள் தோறும் தள்ளுவண்டிக்கடைகள் முளைத்து விடும். 'பாஸ்ட் புட் கடை' என்ற அடையாளத்துடன், சில்லி சிக்கன், மீன், சூப், காலிபிளவர், நுாடுல்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா என, பல வகை சைவ, அசைவ தின்பண்டங்கள் தயாரித்து விற்கப்படுகின்றன.சுடச்சுட, 'மொறுமொறு' வென தயாரித்து வழங்கப்படும் அத்தகைய உணவுகளை ருசிப்பதற்கென்றே, ஒரு பெருங்கூட்டம் உண்டு. 'அவ்வாறு, எண்ணெயில் பொரித்து, வறுத்தெடுக்கப்படும் உணவுகள், உடலுக்கு பாதுகாப்பான முறையில் தயரிக்கப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறையினர்.குறிப்பாக, 'சமைக்க பயன்படுத்தும் எண்ணெயை கவனிக்க வேண்டும்' எனக்கூறும் உணவு பதுகாப்பு துறை அலுவலர்கள். ''பெரும்பாலும் பாமாயில் எண்ணெயில் தான் அத்தகைய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் அதே எண்ணெயில் மீண்டும், மீண்டும் சைவ, அசைவ உணவுகளை வறுத்தெடுப்பது, உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால், கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு கூட வழி வகுக்கும்; சில நேரங்களில் ஆயுளையும் குறைத்துவிடும் என எச்சரிக்கின்றனர்'' உணவு பாதுகாப்புத்துறையினர்.''சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் செந்நிறமாக இருந்தால், அது பலமுறை திரும்ப, திரும்ப பயன்படுத்தப்பட்டது என்பதை, உணவருந்த செல்வோர் உணர்ந்து, அத்தகைய எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்கத் தான், பயன்படுத்தப்படும் எண்ணெயை மறுசுழற்சிக்கென பெற்று, அதற்குரிய தொகையை கொடுக்கும் திட்டமும் உள்ளது. இதை 'பாஸ்ட் புட்' கடைக்காரர்கள் பயன்படுத்தி, சுத்தம், சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து, மக்களின் ஆயுள் காக்க உதவ வேண்டும்'' எனவும் தெரிவிக்கன்றனர்.---

கருப்பு வெள்ளை காலத்திலும் 'உஷார்' (படம்) 1.5 சி

ஓட்டல் உணவுகள் உடலுக்கு ஊறு விளைவிப்பவை என்பது, இன்று, நேற்றல்ல; உணவுச்சந்தையில் பல ஆண்டுகளாகவே இருந்து வரும் பிரச்னை தான். கடந்த, 88 ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1936ல், அவிநாசியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் அப்போதே ஒரு துண்டு பிரசுரம் அச்சடித்துள்ளனர்.''தகுந்த கவனத்துடன், சுகாதார முறையில், கை பாகம், செய் பாகங்களில் தேர்ந்த பணியாளர்களை கொண்டு நாவிற்கு ருசி, மனதிற்கு மகிழ்ச்சி தரும் சிற்றுண்டிகளை தயாரிக்கிறோம். சுத்தமான நெய், கலப்படமற்ற நல்லெண்ணெயில் மட்டுமே பட்சணங்களை (உணவு பண்டங்கள்) தயாரித்து விற்பதால், ஒரு முறை எங்கள் உணவு கூடத்துக்கு வந்தால், வேறு கடைக்கு அடியெடுத்து வைக்க மாட்டீர்கள்' என்ற வாசகத்தை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.---பட விளக்கம்:அவிநாசி, போலீஸ் ஸ்டேஷன் எதிரில், 1936ம் ஆண்டில் செயல்பட்ட ஒரு ஓட்டலின் விளம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி